Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

Saturday, 6 February 2016

வருகிறது லை-பை : வைபை விட 100 மடங்கு வேகம் அதிகம்

வருகிறது லை-பை : வைபை விட 100 மடங்கு வேகம் அதிகம் 




வயர் இணைப்பு இல்லாமல், இணைய தள வசதியை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் வைபை(WiFi) விட 100 மடங்கு வேகம் அதிகமான லைபை(LIFI) எனும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். நாம் இப்போது, வைபை என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். அதன் மூலம், ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், லேப்லெட் ஆகியவற்றில் இணையதள வசதிகளை பெறுகிறோம். ஆனாலும் வைபை மூலம் தகவல்களையோ அல்லது அப்ளிகேஷனையோ பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் தாமதமாகிறது என்ற கருத்து பரவலாக உண்டு. அதனால் வைபை-யை விட 100 மடங்கு வேகமாக செயல்படும் லைபை என்ற தொழில்நுட்பத்தை எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் அப்ளிகேஷன்களை அதிவேக முறையில் பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த லைபை வருங்காலத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பது உறுதி.

No comments:

Post a Comment